Blog

கருக்கலைப்பு செய்யும் முறைகள்

06 Aug, 2017 By Uyirkkural

கருக்கலைப்பு செய்ய நினைப்போர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

”செகண்ட் கன்சீவ் ஆயிடிச்சு, ஆனா இப்போ இருக்க ஸ்கூல் ஃபீஸ் நம்மளால சமாளிக்க முடியாது, ஏற்கெனவே ஹவுஸ் லோன், கார் லோன், பர்ஸ்னல் லோன்லாம் கட்டணும் அதான் அப்புறம் பாத்துக்கலாம்னு அபார்ஷன் பண்ண சொல்லிட்டேன்”,

“ரெண்டாவதும் பொண்ணு, அத கலைச்சுத் தொல”,

”காண்டம் வர்க் ஒவுட் ஆகல, காலெஜ் செகண்ட் இயர்லே ஃபார்ம் ஆயிடிச்சு இன்னும் டூ இயர்ஸ் ஸ்டடீஸ் போய்டும் ஸோ அபோர்ட் பண்ணிட்டேண்டி”,

”மூள வளர்ச்சியில்லாத கொழந்தன்னு அல்ட்ராசவுண்ட்ல  தெரிஞ்சுதாம், டாக்டரே கலைக்க சொல்லிட்டாரு”—

இப்படி வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு எவ்வாறு செய்யப்படுகின்றது என்று தெரியுமா?

”கருக்கலைப்பு செய்வது மகா பாவம்!” என்ற கருத்தை முன்வைப்பதோ, கருக்கலைப்பு செய்யும் பெண்கள் கருணையற்றவர்  என்றோ, கருக்கலைப்பு செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதோ இப்பதிவின் நோக்கமன்று. கருக்கலைப்பு எவ்வாறு நடைபெறுகிறது, கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் சார்ந்த உண்மைகளின் தொகுப்பு மட்டுமே இப்பதிவு.

*தானாக கலையும் கரு (miscarriage) பற்றி நாம் விவாதிக்கப்போவதில்லை, உயிருள்ள கருவை மாத்திரைகள் மூலமோ, அறுவை சிகிச்சை மூலமோ கருக்கலைப்பு (abortion ) செய்வது பற்றியே இத்தொகுப்பு.

கருவில் உள்ள குழந்தையின் வயதைப் பொருத்து, கருக்கலைப்பு செய்யும் முறை மாறுபடுகிறது.

  1. மாத்திரைகள் மூலம் செய்யப்படும் கருக்கலைப்பு (pill abortion/medical abortion)
  2. கருவை  சுரண்டி மற்றும் உருஞ்சி எடுத்தல் (vaccum aspiration or suction abortion/ suction curettage abortion)
  3. கருவிலேயே உடலுருப்புக்களை சிதைத்து வெளியேற்றுதல் (dilation and evacuation abortion)
  4. உப்பு விஷமளித்தல் (salt poisoning)
  5. ஃப்ரோஸ்டகிளாண்டின் இரசாயன கருக்கலைப்பு (prostaglandin chemical abortion)
  6. பகுதி பிறப்பு கருக்கலைப்பு (partial birth abortion)

மேற்க்கூரிய கருக்கலைப்பு முறைகள், பெண்ணின் வயது, உடல் நலம், கருவிலுள்ள குழந்தையின் வயதைப்பொருத்தும், மருத்துவ வசதிகள் கிடைக்கும் தன்மை பொறுத்தும் நிர்ணையிக்கப்படுகிறது. அவற்றின் சுருக்கமான விளக்கத்தை கீழே பார்ப்போம்.

  1. மாத்திரைகள் மூலம் செய்யப்படும் கருக்கலைப்பு (PILL ABORTION/MEDICAL ABORTION)

கருவுற்று 9 வாரம் வரையுள்ள குழந்தையை கலைக்க மிஃபிரிஸ்டோன் (mifeprestone), மிசோபுரோஸ்டால் (misoprostol) என்ற மாத்திரைகளைக் கொண்டு இரண்டு நாள் இடைவெளியில் இக்கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. தாய் உட்கொள்ளும் ஊட்டச்சத்து கருவின் சுவற்றில் தங்கியுள்ள குழந்தையை அடையாமல் தடுப்பது முதல் மாத்திரையின் செயல். ஊட்டச்சத்து இல்லாமல் பட்டினியில் துவண்டுள்ள கருவை வெளியேற்றுவது இரண்டாவது மாத்திரையின் செயல். நம் நாட்டில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இம்மாத்திரைகளைக் கொண்டு 14 வாரமான கருவைக் கூட கருக்கலைப்பு செய்வதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் 9 வாரத்திலுள்ள குழந்தைக்கு இதயத்துடிப்புள்ளது பலருக்கு தெரியாத உண்மை.

  1. கருவை உருஞ்சி எடுத்தல் (VACCUM ASPIRATION OR SUCTION ABORTION)

13 வாரத்திற்க்கு உட்பட்ட கருவை கலைக்க இம்முறையை உபயோகிப்பர். Canula என்ற பிளாஸ்டிக் கருவியை தாயின்  பிறப்புறுப்பினுள் வைத்து  vacuum cleaner போன்று 29 மடங்கு அதிவேக அளவில் உரிஞ்சும் சக்தி கொண்ட இயந்திரத்துடன் இனைத்துவிடுவர். இந்த இயந்திரத்தின் வலிமையை தாள முடியாமல் கருவானது கலைந்து, நச்சுக்கொடி மற்றும் இரத்தம் இவற்றோடு வெளியேறும். வெளியேற்றப்பட்ட சிதைந்த கருவின் அனைத்து பாகங்களும் உள்ளதா என்று சரி பார்க்கப்படும்.                                                                                                                                                இதன்பின் மீதமுள்ள உருப்புக்கள் ஏதும் கர்பப்பையில் தங்கிவிடுவதை தவிர்க்க curette என்ற கருவி கொண்டு கர்பத்தின் உட்புரத்தை சுரண்டி மீண்டும் vacuum கொண்டு உறிஞ்சி

வெளியேற்றுவர்.

9week abortion procedure

3. கருவிலேயே உடலுருப்புக்களை சிதைத்து வெளியேற்றுதல் (DILATION AND EVACUATION ABORTION)

d&Eabortion.jpg

படத்தில் காண்பித்துள்ளதுபோல சுமார் 18-20 வாரம் வரை , அதாவது 4 மாத்திற்க்கு மேல் உள்ள குழந்தையை இவ்வாறான முறையில் கருக்கலைப்பு செய்வர். Clamp என்ற மருத்துவ கருவியை  பிறப்புறுப்பினுள் செலுத்தி அவ்வப்போது கிட்டும் குழந்தையின் உடல் பாகங்களை ஒன்றொன்றாக பிய்த்தெடுத்து கடைசியில் தலையை கர்பத்தினுள்ளேயே நசுக்கி வெளியேற்றுவர்.

4. உப்பு விஷமளித்தல் (SALT POISONING)

பொதுவாக 16 வாரத்திற்க்கு மேற்ப்பட்ட கர்பத்தில், தேவையான அளவு பனிக்குட நீர் சேர்ந்தபின் இம்முறையான கருக்கலைப்பு மேற்க்கொள்ளப்படுகின்றது. தாயின் கர்பத்தில் பனிக்குட நீருடன் கலக்கும் வன்னம் பெரிய ஊசியைக் கொண்டு உப்பு விஷத்தை (saline solution) செலுத்துவர். பனிக்குட நீருடன் உப்பு விஷம் கலப்பதால் கருவில் உள்ள சிசு அந்த உப்பு விஷத்தில் இருப்பதாலும், அதையே உட்கொள்வதாலும் உள்ளும் புரமும் உடல் எரிந்து சில மனி நேரங்களில் இறந்து பிறக்கிறது அல்லது பிறந்து இறக்கிறது.

c021sm.jpg

(உப்பு விஷமளிக்கும் முறையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தை)

5. ஃப்ரோஸ்டகிளாண்டின் இரசாயன கருக்கலைப்பு (PROSTAGLANDIN CHEMICAL ABORTION)

கரு உருவாகி நாண்கு முதல் ஆறு மாதம் வரை இவ்வகையான கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. உப்பு விஷமளித்தபின், கர்ப்பத்திலுள்ள பனிக்குட நீரை வெளியேற்றி, ஊசி மூலம் ஃப்ரோஸ்கிளாடின் இரசாயனத்தை செலுத்துவர். கடும் இடுப்பு வலி ஏற்ப்படுத்துவதன் மூலம் (செயற்க்கையான பிள்ளைப்பேறு மூலம்/ premature labor) குழந்தை வெளியேற்றப்படுகின்றது.

6. பகுதி பிறப்பு கருக்கலைப்பு (PARTIAL BIRTH ABORTION)

partial-birth-abortiontamil.jpg

ஐந்து மாதத்திற்க்கு மேற்ப்பட்ட குழந்தைகளை இம்முறை கொண்டு கருக்கலைப்பு செய்வர். பெரும்பாலான சமயங்களில் மருத்துவ தொழில்நுட்ப வசதிகளின் மூலம் ஐந்து மாதத்திற்க்கு மேற்ப்பட்ட சிசுக்கள் தாயின் கற்பத்திற்க்கு வெளியே வாழ்வது சாத்தியமாகிறது. ஆயினும் இம்முறையான கருக்கலைப்புக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. Forceps என்ற கருவியை தாயின் பிறப்புறுப்பில் செலுத்தி, குழந்தையை அதன் கால்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியே இழுப்பர். பிறப்பு வழிப்பாதை வரை இழுத்து, சிசுவின் தலை உள்ளும், உடல் மற்றும் கால்கள் வெளியுமாய் வைத்து, சிசுவின் முதுகெலும்புத் தண்டை கத்திரியால் வெட்டிவிடுவர். வெட்டிய அப்பகுதி மூலம் டியூப் ஒன்றை செலுத்தி உரிஞ்சும் இயந்திரம் (vacuum) மூலம் சிசுவின் மூளையை வெளியேற்றுவர். பின்பு மண்டையை உள் வைத்தே பிளந்து, சிதைத்து வெளியேற்றுவர்.

இதற்க்கும் மேற்ப்பட்ட பல கருக்கலைப்பு முறைகள் உள்ளன.

கருக்கலைப்பு செய்பவரும் செய்துகொள்பவரும் பெரும்பாலான சமயங்களில் இவ்வுண்மைகளை நிதானத்துடன் ஆறாய்ந்து புரிந்து கொள்வதில்லை. கருக்கலைப்பு செய்வதால் ஒரு உயிர் கொல்லப்படுவது மட்டுமல்லாமல் கருவுற்ற தாய்க்கு ஏற்ப்படும் பக்கவிளைவுகள் எண்ணற்றவை. கருக்கலைப்பு என்பது ஒரு நபரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல. தனிப்பட்ட நபரைத் தாண்டி ஒரு குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டை பாதிக்குமளவு உள்ளூருள்ள விஷயம். கருக்கலைப்பு என்ற செயலின் கணமறிந்து செயல்படுவோம்.

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos