Blog

ஹாசினி – நுகர்வுக் கலாச்சாரத்திற்கு பலியான உயிர்

06 Aug, 2017 By Uyirkkural

7 வயது பெண் குழந்தை ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்திர்காங்க. கொலை செய்தவன் படிக்காதவனுமில்ல, வேற ஊர்க்காரனுமில்ல. வாழ்வதற்க்கு ”பாதுகாப்பான நகரம்”  என்ற பட்டியல்ல முதலிடம் வகிக்கும் சென்னை நகரத்துல இப்படியொறு சம்பவம் நடந்தது பலருக்கு அதிர்ச்சி. இப்பத்தான் ‘நீயா நானா’ நிகழ்ச்சில, ஜல்லிக்கட்டு போறாட்டத்தின் போது ’ஆண்கள் ஒருவர் கூட பெண்கள் மேல உரசல’ என்று சொல்லி மாறுதட்டிக்கொணடோம். அதையெல்லாம் தூச்சமாக்கி நம்ம கூனி குருகுறமாதிறி இப்படியொறு பயங்கர சம்பவம்.

விஷயத்துக்கு போரதுக்கு முன்னாடி ஹாசினின் இழப்பை சந்தித்த ஒவ்வொறுவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு ஆண்டவன் மட்டும்தான் நியாயம் வழங்க முடியும் ஆனால் தவறு எங்கே என்பதை ஆராய்ந்து சரி செய்வது நம் ஒவ்வொறுவருடைய கடமை.

இந்த சம்பவம் நடந்த பிறகு ஒரு பக்கம் ‘எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்’, ‘எல்லா ஆம்பளைங்களும் ஒரு கட்டத்தில் பெண்னை கற்பழிப்பு செய்யும் வாய்ப்புள்ளது’ எனவும், ‘இப்படி செய்றவங்களுக்கு தண்டனையை கடுமையாக்கனும்’, ‘குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் சொல்லிக் கொடுக்கனும்’ என்றும் பல பேர் பல விதத்துல தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக கைய்யாண்டால்தான் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு சறியான தீர்வு காண இயலும். ஏனெனில் 911 (100) அழைத்த சில நொடிகளிலேயே காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்படும் மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட சம்பவங்களை முழுவதுமாகத் தவிற்க இயலவில்லை, கொடூர தண்டனைகள் உடனடியாக வழங்கப்படும் நாடுகளிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் கல்வி வழங்கப்படும் நாடுகளில் இதற்க்கும் மேலான செயல்கள் நடைபெறுகிறது.

தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும், ஆனால் வெறும் பாலியல் கல்வியோ, கொடூர தண்டனைகளோ, எல்லா ஆண்களும் இப்படித்தான் என்ற தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதாலோ இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இயலாது. அவ்வாறு நினைப்பது முள் புதரை மேலோட்டமாக சுத்தம் செய்வதுபோலாகும். எப்போதுமே முட்செடியை மேலோட்டமாக சுத்தம் செய்தால் அது மீண்டும் மீண்டும் அதிகமாக வளரும், அதன் வேர் நிலத்தின் அடியில் ஆழமாக ஊன்றிக்கொள்ளும். வேரைப் பிடுங்கினால்தான் முட்புதரை வளராமலும் படறாமலும் தடுக்க முடியும். அது போலத்தான் இப்படிப்பட்ட பிறச்சனைகளும்.

ஹாசினி, நந்தினி, சுவாதி இந்த சம்பவங்களெல்லாம் வெறும் அறிகுறிகளே. எதனுடைய அறிகுறி ? சமுதாயத்தில் ஏற்ப்படும் மாற்றத்திற்கும் கலாச்சார சீர்கேடுக்குமான அறிகுறி. எதை வைத்து சமுதாயத்தில் ஏற்டுகிற மாற்றம் ‘கலாச்சார சீர்கேடு’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறேன்? அதை புரிந்துகொள்வதற்க்கு முன் ‘கலாச்சாரம்’ என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்துவது அவசியம். ஒரு குழுவின் வரலாறு,பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் கலாச்சாரம். அக்கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதும், பேனிக்காப்பதுமே கலைகள். கலைகளைக் காத்து வாழ்க்கை முறையை இழந்தால் கலாச்சாரத்தை காக்க இயலாது.

கலாச்சார சீர்கேடு ஏற்ப்பட்டதற்க்கான ஆதாரம் மற்றும் அதைக் குறிக்கும் அறிகுறிகள் என்ன?

1. குடும்பங்கள் உடைவது மூலம் : மாறிவரும் குடும்ப சூழ்நிலையை சற்று ஆறாய்ந்து பார்த்தால் இந்த உண்மை நங்கு புலப்படும். பெண்னியம் என்ற பெயரில் ‘பெண் சுதந்திரம்’ பற்றிய தவாறான கருத்தும், அதிகரிக்கும் விவாகரத்துக்கள் அதனால் உடைந்துபோகும் குடும்பங்கள், தனிக்குடுத்தனம் என்ற பெயரில் சுருங்கிவரும் குடும்பங்கள், இப்படி மாறி வரும் நமது சமூகத்தில் அந்த மாற்றத்திற்க்கு முதலில் பலியாவது குழந்தைகளே. ஹாசினி பலியானதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

2. அதிகரிக்கும் நுகர்வுக்கலாச்சாரம் : பொருளீட்டுதல், சொத்து சேர்ப்பது, பொருட்கள் வாங்குவது இப்படி பொருட்களை மைய்யமாக வைத்து இயங்கும் குடும்பங்களிலும், சமுதாயத்திலும் மனித உயிரின் மதிப்பு குன்றிப்போகும். ஹாசினியின் சம்பவம் இதனை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. பொருட்களை முன்னிலைப்படுத்தி இயங்கும் மேலை நாடுகள் எல்லாவற்றிலும் கருக்கலைப்பு, கருணைக்கொலை, சிசுக்கொலை, தற்கொலை, மருத்துவரின் உதவியுடன் தற்கொலை, கருவில் உள்ள குழந்தைகள் மீதான ஆராய்ச்சி, இவையெல்லாம் சட்டத்தின் அனுமதியுடன் நடைபெறுகின்றன. எந்த ஒரு சமூகத்தில் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதோ அந்த சமூகத்தில் மனித உயிரின் மதிப்பு குறைந்துகொண்டே வரும் என்பதை ஆணித்தரமாக கூறலாம்.

sample.jpg

3. மாறிவரும் கல்வி முறை :  எழுதப் படிக்க தெரிந்ததோ பொருளீட்டுதலோ கல்வியாகாது. நமது  கல்விமுறையும் ஒழுக்கத்தை தவிர்த்து, நுகர்வுக்கலாச்சாரத்தை நோக்கியே செயல்படுகிறபோது மாறிவரும் சூழ்நிலை கலாச்சார சீர்கேடையே உணர்த்துகிறது என்றி திட்டவட்டமாகக் கூறலாம்.

4. சீர்கேடை சாதரனமாக்கும் ஊடகம் : சமூக வளைதளங்களிலும் ஊடகங்களிலும் அதிகரித்து வரும் ஆபாசம். சீர்க்கேடை சீர்கேடென்று சொல்லாமல் அதனை சாதரனமாக்கும் திரைப்படங்கள், அவரவர் தங்கள் விருப்பம்போல் வாழலாம் தவறு சரி என்று எதுவுமில்லை என்ற தவறான கோட்பாடுகள், பெண்களை போகப்பொருளாக சித்தறிக்கும் கானொளிகள் இவையெல்லாம் நமது சமூகம் தவறான பாதையை நோக்கி பயனிக்கிறது என்பதற்க்கான தெளிவான அறிகுறிகள்.

இப்படிப்பட்ட மாற்றத்திற்க்கு பலியாவதுதான் ஹாசினி மற்றும் நந்தினி போன்ற உயிர்கள். இதனை உண்மையகவே நாம் சரி செய்ய நினைத்தால் நாம் கொண்டுவர நினைக்கும் மாற்றம் குடும்பத்தில் ஆரம்பித்து சமுதாயத்தில் பிரதிபலிக்க வேண்டும். நம் வாழ்க்கை முறையையும் அதை சார்ந்த அறப்பண்புகளையும் காத்தால் மட்டுமே நம் கலாச்சாரத்தையும், ‘தமிழன்’ ‘தமிழச்சி’ என்ற அடையாளத்தையும் காக்க இயலும்.

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos