Blog

உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம்

18 Nov, 2017 By Uyirkkural

 

நவம்பர் 19  உலக வாசக்கடமி தினமாக கொண்டாடப்படுகின்றது.  வாசக்கடமி  (vasectomy) என்பது ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை. இவ்வருடம் மெக்சிகோவில் அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சி சுமார் 48 நாடுகளின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பல வண்னமயமான விளம்பரங்கள், வேடிக்கைகள், மேளதாளங்கள் என திருவிழா போல களைக்கட்டும் இந்நிகழ்ச்சியின் பின்னனியில் உள்ள சில திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்பாலும் கெண்யா, இந்தோனேசியா போன்ற ஏழை நாடுகளைக் குறி வைத்து அறங்கேற்றப்படுகின்றது. அறங்கேற்றுவது என்னவோ அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் என்றாலும் அறங்கேற்றப்படுவது முற்றிலும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே. காரணம்? வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படும் மக்கள் தொகை எண்ணிக்கை உலக அமைதிக்கும்,  பாதுகாபிற்க்கும், உணவு உற்ப்பத்தி மற்றும் விநியோகத்திற்க்கு பங்கம் விளைவிக்க வாய்ப்புள்ளதாக மேலை நாடுகள் கருதுகின்றனர். இக்காரணத்தை சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் தீர்வு கருத்தடை மூலம் மக்கள்தொகை கட்டுப்பாடு.

திருவிழா போன்ற ஏற்ப்பாடுகளுடன் நடைபெறும் கருத்தடை முகாம்கள் இந்தியாவிற்க்கு புதிதல்ல. 1960 –கள் முதல் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையின் முயற்ச்சியில் போர்க்கால நடவடிக்கையில் இம்முகாம்கள் இந்தியா முழுவதும் இயங்கிவந்தன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்க்கொண்ட முயற்ச்சிகள் பெரும்பாலும் மேலை நாடுகளின் ஆலோசனையுடனும், பண உதவியுடனும் நடைப்பெற்றன. USAID, UNFP, Swedish Development Agency, மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின்மீது கொண்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்டாயக் கருத்தடை மூலம் மக்கள்தொகையைக் குறைக்கும் தவறான அனுகுமுறையை தேர்வு செய்தனர். இதை அடைவதற்க்கு அவர்கள் மேற்க்கொண்ட யுக்தி:

அ. நிரந்தர கருத்தடை ஏற்ப்பவர்க்கு ஊக்கத்தொகை,

ஆ. அதிகபட்ச்ச வாசக்கடமி செய்த சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.

வசக்டாமி முகாமிற்க்கு மேற்க்கொண்ட நெறிமுறையற்ற பிரச்சாரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

1970 இல் ”எர்நாக்குளம் ஆய்வு” என்ற கேரள அரசின் முயற்ச்சியில் ஊக்கத்தொகை சார்ந்த கருத்தடை அறிமுகப்படுத்தப்பட்ட்து. தற்ப்போது நடைபெறும் ‘வாசக்கடமி தினம்’ பேலவே திருவிழா போன்று ஏற்ப்பாடுகள் நடைபெற்றன. மருத்துவ முகாம் போல் தோன்றினால் அதிகபட்ச்சமான வருகை காணப்படாதென திருவிழா போல் காட்சியளிக்க முயற்ச்சிகள் மேற்க்கொண்டன. வசக்டாமி ஏற்ப்பவர்க்கு தலா 31 ரூபய் ஊக்கத்தொகயும், ஒரு வாரத்திற்க்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் 8 கிலோ பருப்பு வழங்கப்பட்டன.  மக்களின் வருமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை தங்களது ஆதாயமாக்கி பசியால் வாடுபவர்க்கு வசக்டாமியை தீர்வாக தினித்தனர். அதன் விளைவாக நவம்பர் 1970 மற்றும் ஜூலை 1971 இல் நடைப்பெற்ற 2 மாத முகாமில் மட்டும் சுமார் 78,000 வசெக்கடாமி செய்யப்பட்ட்து.

எர்நாக்குளம் ஆய்வை தொடர்ந்து இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அவசர சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது பல்லாயிரக்கனக்கான  கட்டாயக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டது. 1975 இல் மட்டும் சுமார் 80,00,000 நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் ஒப்புதலின்றி, கட்டாயத்துடன் பல சமயங்களில் கத்தி முனையில் வசக்டாமி செய்யப்பட்டது. ஹிட்லர் மேற்க்கொண்ட இனப்படுகொலையில் செய்யப்பட்ட கருத்தடைகளை விட பண்மடங்கு அதிகமான கருத்தடைகளை இந்தியா மேற்க்கொண்டது. பொதுநலத் திட்டமாக ஆரம்பித்த ஒன்று கொடூரப் போராக மாறியது.

மனித கண்னியத்தையும் தன்மானத்தையும் சிறிதளவும் கருத்தில்கொள்ளாது ஆடு மாடுகளைக் கையாளுவதுபோல் ஏழை எளியவரைக் கையாண்டனர். ஏழ்மைக்கு காரணம் முறையற்ற அமைப்புகள் மற்றும் ஊழல் நிறைத்த ஆட்சிமுறை என்பது அல்லாமல், ஒருவனின் ஏழ்மைக்குக் காரணம் அவன் குடும்பத்தின் அளவு என்ற தவறான கருத்தை பிரப்பினர். தனி மனித உரிமையையும் மனித கண்னியத்தையும் கருத்தில் கொள்ளாத எந்த ஒரு பொதுநலத்திட்டமும் தோல்வியடைவது மட்டுமல்லாது அது அவனை அழிக்கும் கருவியாக மாறுவது இந்த விஷயத்தில் உறுதுயானது.

மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆக்கப்பூர்வமாக கையாளுவதில் கவனம் செலுத்தாமல், அழிப்பதில் ஆர்வம் காட்டும் மனப்பாங்கு மாற வேண்டும். கசாப்புக் கடைகளில் விலங்குகளை வெட்டுவதுபோல ஏழைகளுக்கு வசக்டாமியை தினிப்பது இழிவான செயல். உலக வாசக்கடமி தினத்தின் நோக்கமும் இதுவே.

Dr. Dough Stein மற்றும் Jonathan Stack இருவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த முயற்ச்சியே வசக்டாமி தினம். வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வமுள்ள IPPF, Marie Stopes, FHI 360 போன்ற நிறுவணங்களின் நிதியுதவியுடன் இயங்கிவருகம் இவர்கள் 2018 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்க்கு வைக்கும் குறி இந்தியா. வாசக்டமியினால் ஏற்ப்பட்ட உயிர்பலியும், மனித உரிமை மீரலும் கலாச்சார சீரழிவும் போதும். மேலுமொரு “எர்நாகுளம் ஆய்வு” வேண்டாம்.

இத்தேதியில் கட்டாயக் கருத்தடைக்கு பலியான நம் சகோதர சகோதரிகளை நினைவில் கொள்வோம்.

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos