Blog

ஓலம்

09 Aug, 2017 By Uyirkkural

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ! –  தாய்மை  – வி.அ உவைஸ்

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை!  எனினும் தாய்மையைப் போற்றும் நம் பூமியில் காதில் கேளா ஒரு ஓலம். பெரிதும் பேசப்படாத இந்த ஓலத்தின் பின்னனி என்ன? 20 வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்று 1971 இல் அனுமதி வழங்கப்பட்டதன் நோக்கமும் பின்னனியும் எத்தனைப்பேர் அறிவோம்? 20 வாரத்தில் உள்ள சிசு எப்பேர்பட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதைப்பற்றிய அறிவியல்பூர்வமான உண்மைகளை அறிவோமா?

  இந்தியாவில் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ அனுமதி வழங்கப்படலாமா என்ற ஆய்வை மேற்க்கொண்ட ஷாந்திலால் ஷா கமிட்டியின் ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவின்  கிஸ்சிங்கர் ரிப்போர்டின் தகவலின்படி இந்தியாவின் மக்கள்தொகையைக் குறைக்கும் நோக்குடன் இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட்து என்பது மறுக்கமுடியாத உண்மையாக விளங்குகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜப்பான் நாடு கருக்கலைப்பு சட்டம் அமுல்படுத்தியது. அதன் காரணமாக வெறும் 10 ஆண்டுகளில் மக்கள்தொகையை 50 சதவிகிதம் குறைந்ததை கண்ட இந்தியா அதே வழிமுறையை பின்பற்ற என்னியது. 1960 களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவந்த இந்திய அரசாங்கம் ஜப்பானைப் போன்ற விளைவுகளைக் கொண்டுவர இயலாதலால் கருக்கலைப்பு சட்டத்தை இலகுவாக்குவது மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முற்ப்பட்டது.

ஆனால், அஹிம்சையை கொண்டாடும் இந்தியாவில் மக்கள்தொகையை கட்டுப்பத்த வன்முறையை உபயோகிப்பது தகுமா? சீன நாடு அதன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “ஒற்றை குழந்தை” திட்டத்தை அமுல்படுத்தியது. ஒற்றை குழந்தை சட்டத்தை மீறும் குடும்பங்கள் தீவிரமாக தண்டிக்கப்பட்டனர். உச்சக்கட்ட தண்டனையாக கர்பிணிப்பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்தனர். 9 மாத கற்பத்தை கூட கருக்கலைப்பு செய்து கொண்றுகுவித்தனர். இதனால் அச்சமுதாயத்தின் குடும்ப அமைப்பு சீரிழந்து பெருவாரியாக பாதிக்கப்பட்டது. கருக்கலைப்பை கருத்தடையாக பயன்படுத்துவது நம் குடும்பத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் ஏற்ப்புடைய செயலா? கருவறையே பாதுகாபற்ற இடமாகுமெனில், தாயின் மனமே நிபந்தனையற்ற அன்பை இழக்குமெனில், குடும்பங்களில் வன்முறையை விதைப்போமெனில் நாட்டில் எவ்வாறு அமைதி நிலவும்?

 மக்கள் தொகை கட்டுப்பாடை வன்முறையைக் கொண்டு தீர்க்க நினைக்கும் ஒவ்வொறு சமூகத்திலும் பெண் சிசுக்கொலை பெருவாரியான அளவில் காணப்படுகின்றது. பாப்புலேசன் ரிசர்ச் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆய்வின்படி 2000-2014 ஆண்டில் சுமார் 2,00,00,000 குழந்தைகள் கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதன் காரணம் பெண்ணாய் உருவெடுத்ததால். பெண்களே பெண்களுக்கு எதிரி என்பது பெண் சிசு கருக்க்கலைப்பு விஷயத்தில் உருதியடைகிறது. எனினும் பெண்சிசுக்கொலைக்கு எதிராக பெண்னியவாதிகள் குறல் கொடுக்காதது ஏன்?

மக்கள் தொகை கட்டுப்படிற்க்கும், பெண்சிசுக்கொலைக்கும் கருக்கலைப்பை நியாயப்படுத்தும் நம் சமூகம் தற்ப்போது வேறு சில காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு என்னும் வன்முறையை சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர். கருத்தடை உபயோகம் செயலிழந்தால், கருவில் உள்ள குழந்தை, வேலைக்கு அல்லது பதவி உயர்வுக்கு தடையாக இருந்தால் கூட கருக்கலைப்பு செய்துகொள்ளும் சமூகமாக மாறிவருகிறோம்

நம் தவறுக்காக அந்த பச்சிளம் குழந்தை தண்டிக்கப்படுவது நியாயமா? ஏனெனில் கருவுற்ற 20 வாரத்தில் கருக்கலைப்பு செய்யப்படும் குழந்தை வலியை அனுபவித்து இறப்பதாக ஆய்வாளர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.

கருக்கலைப்பு என்னும் வன்முறை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள கண்ணியமான அன்பைக் குலைத்து, சுயநலத்தை மேம்படுத்தி, இல்லறத்தை அழித்து, குடும்பங்களைக் குலைக்கும் சமுதாயத் தீங்காக பரவிவருகிறது. இதனால் உடைந்த உள்ளங்கள் எத்தனை, சிதைந்த குடும்பங்கள் எத்தனை, பிரிந்த உறவுகள் எத்தனை?

அன்பைக் குலைத்து வன்முறையை கொண்டாடும் சமூகம் எவ்வாறு பாகுபாடற்ற, மனித உரிமை மீறலற்ற சமூகமாக விளங்கும்? ஏனெனில் மனித உரிமைகளில் அடிப்படை உரிமை “வாழ்வுரிமை” அல்லவா? ஒருவர் வாழ்வதற்க்கே உரிமை இல்லையெனில் மற்ற உரிமைகளிருந்து என்ன பயன்?

எந்த காரணத்திற்க்காக கருக்கலைப்பு செய்யப்பட்டாலும் மறுக்கமுடியாத சில உண்மைகள் இவையே: கருக்கலைப்பு ஒரு உயிரை வதம் செய்வது, கருக்கலைப்பு செய்யப்படும் சிசு அன்பை இழந்து நிராகரிக்கப்பட்டு, பல சமயங்களில் பெறும் வேதனையை அனுபவித்து உயிரிழக்கிறது, கருக்கலைப்பு செய்யும் பெண் அக்குழந்தையை கொல்வதால் தன் தாய்மையை நிராகரிக்க இயலாது, கருக்கலைப்பிற்க்குப் பின்னும் அவள் தாய் தான். ஆனால் இறந்துபோன சிசுவின் தாய். இயற்க்கை அளித்த தாய்மையோ அல்லது இறைவன் அளித்த தாய்மையோ கருக்கலைப்பு மூலம் அவள் தாய்மை புண்படுகின்றது.  குழந்தையை இழந்த தாயைப்போல் மன உளைச்சலும், தற்கொலை சிந்தனைகளும் அவளை வாட்டி வதைக்கின்றன. கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் பெருவேதனைக்கு உள்ளாகின்றனர். இப்படிப்பட்ட வன்முறை தேவையா? கள்ளங்கபடமற்ற உயிரைக் கொல்வதால் எந்தப் பிரச்சனைக்கும் சரியான தீர்வு காண இயலாது. இதை எப்போது உணர்வோம்? நம் நாட்டில் கருக்கலைப்பு மூலம் வருடந்தோரும் கொல்லப்படும் 60,00,000 உயிருக்கு எவ்வாறு நீதி வழங்குவோம்?

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos