Blog

மருத்துவர்களை பெரு வியப்பில் ஆழ்த்திய குறைமாதக் குழந்தை !

29 Jul, 2017 By Uyirkkural

22 வாரத்தில், அதாவது ஆறு மாதம் கூட நிறைவடையாத கருவில் உள்ள சிசு, தாயின் கருவறைக்கு வெளியே வாழ்வது சாத்தியமா? சாத்தியம் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குழந்தை ஒன்று உறுதிசெய்துள்ளது. டெல் அவிவ் நகரத்தைச் சேர்ந்த இசிலோவ் என்ற மருத்துவமனையில் ஆரோன் என்ற ஆண் குழந்தை கருதரித்த 22 வாரத்தில் பிறந்தது மட்டுமல்லாமல், குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளையும் தாயின் கருவுக்கு வெளியே காப்பற்ற இயலும் என்று நிரூபித்துள்ளது.

6 மாதத்திற்க்கு குறைவாக பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவது சாத்தியமற்றது என்ற மருத்துவர்களின் பெரும்பாலான கருத்தை முறியடித்து, பெற்றோருடன் வீடு திரும்பிய ஆரோனின் சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. வெறும் 670 கிராம் எடையுடன் பிறந்த ஆரோன் மருத்துவ உதவி பெற்றது தப்பித்தது மருத்துவர்கள், சிசுவின் வயதை சரியாக கணக்கெடுக்காததே காரணம் என்பது சிலரின் கருத்து. 24 வாரத்திற்க்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் நுரையீரல் நல்ல வளர்ச்சியடைந்து, செயல்படத்துவங்குவதால், தாயின் கருவிற்க்கு வெளியே, நல்ல மருத்துவ தொழில்நுட்ப வசதிகளின் துணையால் சிசுக்களை நன்முறையில் காப்பற்ற இயலும் என்பது மருத்துவர்களின் கருத்து மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் 24 வாரத்திர்குள்ளும் இது சாத்தியம் என்பது இக்குழந்தை கற்றுத்தந்த பாடம்.

பொதுவாக 24 வாரத்திற்க்குள் பிறக்கும் குறைமாதக் குழந்தைகளை கருவறைக்கு வெளியே சிகிச்சை அளித்து காப்பற்றுவது இயலாத விஷயமென்று மருத்துவர்கள் அசட்டையாக இருந்த சமையத்தில், மாறி வரும் தொழில்நுட்ப சூழ்நிலையில் இவையெல்லாம் சாத்தியமாக்கக் கூடும் என்று உணர்த்தியுள்ளான் 22 வாரமான குட்டிப் பையன் ஆரோன். மேலும், ஆரோன் பிறப்பதற்க்கு முன் மருத்துவர்கள் பெரும் கேள்விக்குரியோடு இருந்தனர். குழந்தை பிழைக்காது, அப்படி பிழைத்தாலும் 90 சதவிகிதம் ஊனத்துடன் தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் ஆரோனின் பெற்றோரிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஏப்பிரல் 2016 இல் பிறந்த ஆரோன் 5 மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்டு மாதம் விடிவிக்கப்பட்டான்.

26 வாரம் வரை கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்க வேண்டும் என்று போராடும் பெண்ணியவாதிகளுக்கு குட்டிப் பையன் ஆரோனின் பிறப்பு பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கை மனிதத்திற்க்கும், உண்மையான பெண்ணியத்திற்க்கும் மிகவும் முரண்பாடான கோரிக்கை என்பதை வெளிப்படுத்துகிறது.

22 வாரத்திலேயே குழந்தையை கருவறைக்கு வெளியே காப்பற்ற இயலுமெனில் கருக்கலைப்பு செய்வது ஒரு உயிரை வதம் செய்வதற்க்கு இணை அல்லவா? குழந்தையை பேணிக்காக்க இயலாத சூழ்நிலையென்றால், கருக்கலைப்பு செய்யாமல் தத்துக் கொடுப்போமே? கருக்கலைப்பை விட குழந்தையை தத்துக்கொடுப்பது மனிதாபிமான செயல்தானே?

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos